விவசாயி கொலை வழக்கில் ஒருவர் கைது; 4 பேருக்கு வலைவீச்சு
விவசாயி கொலை வழக்கில் ஒருவர் கைது செய்யப்பட்டார். 4 பேரை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர்.
கோலார் தங்கவயல்: சிக்பள்ளாப்பூர் மாவட்டம் சிட்லகட்டா போலீஸ் எல்லைக்கு உட்பட்ட நாராயணதாச ஹள்ளி கேட் அருகே விவசாயி சிக்க ஆஞ்சனப்பா என்பவர் மர்ம நபர்களால் கொலை செய்யப்பட்டார். இதுகுறித்த ஆஞ்சனப்பாவின் தம்பி அஸ்வத்தப்பா என்பவர் சிட்லகட்டா புறநகர் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். பின்னர் கொலையாளிகள் ஒருவராக கருதிய வெங்கடேஷ் என்பவரை போலீசார் அழைத்து வந்து விசாரணை நடத்தினர். அப்போது அவர் ஆஞ்சனப்பாவை கொலை செய்ததை ஒப்புக்கொண்டார்.
தற்போது வெங்கடேசிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் தலைமறைவாகி விட்ட அவரது கூட்டாளிகள் 4 பேரை போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் நிலத்தகராறு காரணமாக இந்த கொலை சம்பவம் நிகழ்ந்திருப்பது தெரியவந்துள்ளது. தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
==============