தீபாவளி பண்டிகையை ஒட்டி அதிக கட்டணம் வசூலித்த 410 ஆம்னி பஸ்கள் மீது வழக்கு
தீபாவளி பண்டிகையை ஒட்டி அதிக கட்டணம் வசூலித்த 410 ஆம்னி பஸ்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
பெங்களூரு: தீபாவளி பண்டிகையை ஒட்டி பெங்களூருவில் இருந்து வட கர்நாடகத்திற்கு செல்லும் ஆம்னி பஸ்களில் வழக்கத்தை விட 5 மடங்கு கட்டணம் கூடுதலாக வசூலிக்கப்படுவதாக போக்குவரத்து துறைக்கு புகார்கள் சென்றன.
இந்த நிலையில் கடந்த மூன்று நாட்களாக பெங்களூருவில் ஆம்னி பஸ்களில் வட்டார போக்குவரத்து துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். இந்த சோதனையின் போது பயணிகளிடம் ஆம்னி பஸ்கள் கூடுதல் கட்டணம் வசூலித்தது தெரியவந்தது. இது தொடர்பாக 410 ஆம்னி பஸ்கள் மீது வட்டார போக்குவரத்து துறை அதிகாரிகள் வழக்கு பதிவு செய்துள்ளனர். மேலும் பஸ்களின் உரிமையாளர்களுக்கு நோட்டீசும் அனுப்பப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி கூடுதல் கட்டணம் வசூலித்ததாக ஆம்னி பஸ்களின் உரிமையாளர்களிடம் இருந்து வட்டார போக்குவரத்து அதிகாரிகள் ரூ.1.90 லட்சம் வரை அபராதமாக வசூலித்து உள்ளனர்.