திருப்பதியில் உண்டியல் காணிக்கை பணம் கையாடல் - ஒப்பந்த ஊழியர் கைது

ஒப்பந்த ஊழியரின் உடைகளுக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த ரூ.72 ஆயிரம் மதிப்புள்ள அமெரிக்க டாலர்கள் கண்டுபிடிக்கப்பட்டது.

Update: 2023-04-30 14:17 GMT

திருப்பதி,

திருப்பதி ஏழுமலையானுக்கு பக்தர்கள் காணிக்கையாக செலுத்தும் பணம், ஆபரணங்கள் ஆகியவற்றை தேவஸ்தான நிர்வாகம் கணக்கிட்டு வருகிறது. இந்த பணியில் தேவஸ்தான ஊழியர்கள், தன்னார்வலர்கள், வங்கி அதிகாரிகள், ஒப்பந்த ஊழியர்கள் ஆகியோர் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில் பணம் கணக்கிடும் பணியில் ஈடுபட்டிருந்த ஒப்பந்த ஊழியரான ரவிக்குமார் வெளியே வந்து கொண்டிருந்தார். அவருடைய நடவடிக்கைகளில் சந்தேகம் இருப்பதை சி.சி.டி.வி. மூலம் தேவஸ்தான விஜிலென்ஸ் துறையினர் கண்காணித்தனர்.

இதையடுத்து ரவிக்குமாரை நிறுத்தி சோதனை செய்த போது, உடைகளுக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த 72 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள அமெரிக்க டாலர்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, காவல்நிலையத்தில் புகார் அளித்ததால், ரவிக்குமாரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.


Full View


Tags:    

மேலும் செய்திகள்