ஒடிசா: ஹிராகுட் அணை வெள்ளநீர் வெளியேற்றம்; நீரில் மூழ்கிய வீடுகள், நிவாரண முகாம்கள் அமைப்பு

ஒடிசாவில் ஹிராகுட் அணையில் இருந்து வெள்ளநீர் வெளியேறியதில் நூற்றுக்கும் கூடுதலான வீடுகள் நீரில் மூழ்கியுள்ளன.

Update: 2022-08-14 12:23 GMT


புவனேஸ்வர்,



ஒடிசாவில் பெய்து வரும் தொடர் கனமழையால் மகாநதி ஆற்றில் வெள்ள எச்சரிக்கை விடப்பட்டு உள்ளது. தொடர் மழையை முன்னிட்டு, 7 மாவட்டங்களுக்கு இன்று வரை சிவப்பு எச்சரிக்கையும் விடப்பட்டு உள்ளது.

தொடர்ந்து வடக்கு வங்காள விரிகுடாவில் உருவாகியுள்ள மற்றொரு காற்றழுத்த தாழ்வு நிலையால், ஒடிசாவின் பல மாவட்டங்களில் தொடர் மழை இருக்கும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்து உள்ளது. மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கையும் விடப்பட்டு உள்ளது.

இந்த சூழலில், ஒடிசாவில் ஹிராகுட் அணையில் இருந்து வெள்ளநீர் வெளியேற்றம் செய்யப்பட்டு உள்ளது. 4 கட்டங்களாக பல்வேறு கதவணைகளும் திறக்கப்பட்டு உள்ளன. இதனால், சம்பல்பூர் மாவட்டத்தில் வெள்ள நீரானது வெளியேறி பல்வேறு பகுதிகளையும் சூழ்ந்துள்ளது.

வெள்ளநீரில் நூற்றுக்கும் மேற்பட்ட வீடுகள் மூழ்கி போயுள்ளன. இதனால், நிவாரண முகாம்கள் திறக்கப்பட்டு மக்களை தங்க வைப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. இதனை சம்பல்பூர் மாவட்ட மாஜிஸ்திரேட் அனன்யா தாஸ் தெரிவித்து உள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்