சூரிய கிரகணம் எதிரொலி: 25-ம் தேதி பொது விடுமுறை
சூரிய கிரகணத்தையொட்டி ஒடிசாவில் பொதுவிடுமுறை அறிவித்து அம்மாநில அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
புவனேஷ்வர்,
இந்தியாவில் வரும் 25ம் தேதி மாலை 5:10 மணி முதல் 6.30 மணி வரை சூரிய கிரகணம் நிகழ்கிறது. இதனையொட்டி கோவில்களில் நடை அடைக்கப்படுவது வழக்கம் ஆகும். ஏராளமான இடங்களில் தென்படும் இந்த சூரியகிரகணம் சுமார் 1 மணி நேரத்துக்கு மேலாக நீடிக்கும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. அதே நேரம் தமிழகத்தை பொறுத்தவரையிலும் மாலை 5.14 மணிக்கு துவங்கி 30 நிமிடங்கள் வரை நீடிக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் சூரியகிரகணத்தையொட்டி ஒடிசாவில் பள்ளி- கல்லூரிகள் மற்றும் அரசு அலுவலகங்களுக்கு பொது விடுமுறை அறிவித்து அம்மாநில அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. சூரியன், சந்திரன், பூமி போன்ற மூன்றும் ஒரேநேர்கோட்டில் வரும்போது கிரகணம் என்பது ஏற்படும். அறிவியல் படி சந்திரனானது சூரியனுக்கும் பூமிக்கும் இடையில் வரும்போது சந்திரனால் சூரியன் மறைக்கப்படுவதால் பூமியிலுள்ள நம் கண்களுக்கு சூரியன் தெரியாமல் போகிறது. இதனையே சூரியகிரகணம் என்கிறோம்.