'ஸ்டார்ட்அப் ஒடிசா யாத்ரா 2.0' திட்டத்தை தொடங்கி வைத்தார் - நவீன் பட்நாயக்
ஒடிசா முதல்-மந்திரி நவீன் பட்நாயக் ‘ஸ்டார்ட்அப் ஒடிசா யாத்ரா 2.0’ என்ற திட்டத்தை இன்று தொடங்கி வைத்தார்.
புவனேஷ்வர்,
ஒடிசா முதல்-மந்திரி நவீன் பட்நாயக் 'ஸ்டார்ட்அப் ஒடிசா யாத்ரா 2.0' என்ற திட்டத்தை இன்று தொடங்கி வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் நவீன் பட்நாயக் பேசியதாவது - இளைஞர்களை தொழில் முனைவோராக மாற்றுவதற்கான முன் முயற்சியாகும். ஒடிசாவில் தற்போது ஆயிரத்து 300 அங்கீகரிக்கப்பட்ட ஸ்டார்ட் அப்கள் உள்ளன. அவற்றின் மூலம் 10 ஆயிரம் வேலைவாய்ப்புகள் உருவாகியுள்ளன. ஸ்டார்ட்-அப் நிறுவனங்களில் 40 சதவீதம் பெண் தொழில் முனைவோரால் நடத்தப்படுகின்றன.
வருகிற 2025-ம் ஆண்டிற்குள் 5 ஆயிரம் ஸ்டார்ட் அப் நிறுவனங்களை உருவாக்குவதற்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும், 'ஸ்டார்ட்அப் ஒடிசா யாத்ரா 2.0' புதுமையான யோசனைகளை முன்னெடுப்பதில் முக்கிய பங்கு வகிக்கும். இவ்வாறு அவர் பேசினார்.