ஒடிசா மாநில முதல் மந்திரி நவீன் பட்நாயக் உடன் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சந்திப்பு
ஒடிசா மாநில முதல் மந்திரி நவீன் பட்நாயக்-ஐ உதயநிதி ஸ்டாலின் சந்தித்தார்
புவனேஸ்வர்,
15-வது உலகக் கோப்பை ஆக்கி திருவிழா ஒடிசாவின் ரூர்கேலா மற்றும் புவனேஸ்வர் ஆகிய நகரங்களில் நடந்து வருகிறது. இந்த நிலையில் உலகக் கோப்பை போட்டிகளை காணவும், ஒடிசா மாநிலத்தில் உள்ள விளையாட்டு அரங்கங்களின் கட்டமைப்புகளை பார்வையிடவும்இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஒடிசா மாநிலம் சென்றுள்ளார்.
ஒடிசாவில் உள்ள கலிங்கா விளையாட்டு அரங்கத்தை உதயநிதி ஸ்டாலின் பார்வையிட்டார். தொடர்ந்து ஒடிசா மாநில முதல் மந்திரி நவீன் பட்நாயக்-ஐ உதயநிதி ஸ்டாலின் சந்தித்தார்