நர்சரி வகுப்பு சிறுமியை பள்ளி வேனில் பாலியல் வன்கொடுமை செய்த டிரைவர்
நர்சரி வகுப்பு பயின்று வரும் 3 வயது சிறுமியை டிரைவர் பள்ளி வேனில் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
போபால்,
மத்தியபிரதேச மாநிலம் போபால் மாவட்டத்தில் உள்ள தனியார் பள்ளியில் 3 வயது சிறுமி நர்சரி வகுப்பு பயின்று வருகிறார். அந்த சிறுமி கடந்த வியாழக்கிழமை பள்ளிக்கு சென்றுவிட்டு வீடு திரும்பியுள்ளார்.
பள்ளியில் இருந்து வீடி திரும்பிய சிறுமியின் உடை மாற்றப்பட்டிருந்தது. மாற்று உடையை யாரே சிறுமிக்கு அணிந்து அனுப்பியுள்ளனர். இதனால், சந்தேசமடைந்த சிறுமியின் தாயார் இது குறித்து பள்ளி நிர்வாகத்திடம் கேட்டுள்ளார்.
அப்போது, பள்ளியில் வைத்து சிறுமியின் உடையை யாரும் மாற்றவில்லை என கூறியுள்ளனர். அப்போது, சிறுமிக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, மருத்துவமனைக்கு கொண்டு சென்று பரிசோதித்துள்ளனர். அதில், சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதற்கான தடயங்கள் இருந்தன.
தனது மகள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ளார் என்பதை அறிந்து அதிர்ச்சியடைந்த சிறுமியின் தாயார் இது குறித்து சிறுமியிடம் கேட்டுள்ளார். அப்போது, அதிர்ச்சி தகவல் தெரியவந்துள்ளது.
நர்சரி வகுப்பு பயின்று வரும் அந்த சிறுமியை பள்ளி வேன் டிரைவர் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார் என்பது தெரியவந்துள்ளது. சிறுமியை பள்ளி வேனில் வைத்து டிரைவர் பாலியல் வன்கொடுமை செய்ததுள்ளார்.
இது குறித்து சிறுமியின் தாயார் போலீசில் புகார் அளித்தார். இதையடுத்து வழக்குப்பதிவு செய்த போலீசார் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த பள்ளி வேன் டிரைவரை கைது செய்தனர். பள்ளி வேனில் வேலை செய்த பெண் ஊழியரையும் போலீசார் கைது செய்தனர்.