நோபல் பரிசு பெற்ற பொருளாதார நிபுணர் அமர்தியா சென்னுக்கு கொரோனா
பொருளாதார நிபுணரும், நோபல் பரிசு வென்றவருமான அமர்தியா சென்னுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கொல்கத்தா,
மேற்குவங்க மாநிலத்தை சேர்ந்த புகழ்பெற்ற பொருளாதார நிபுணரும், நோபல் பரிசு வென்றவருமான அமர்தியா சென்னுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
89 வயதான அமர்தியா சென்னுக்கு கொரோனா தொற்றுக்கான அறிகுறிகள் தென்பட்டதை தொடர்ந்து, அவருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் அவருக்கு தொற்று பாதிப்பு இருப்பது உறுதியானது.
இதை தொடர்ந்து, அவர் பிர்பூம் மாவட்டம் போல்பூர் நகரில் உள்ள அவரது வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். அவரின் உடல் நிலை சீராக இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதனிடையே அமர்தியா சென் விரைவில் குணமடைய இறைவனை பிரார்த்திப்பதாக மேற்குவங்காள முதல்-மந்திரி மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.