2024 தேர்தலில் பாஜகவுக்கு போட்டியே இல்லை: மத்திய மந்திரி அமித்ஷா

2024 நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவுக்கு போட்டியே இல்லை என்று மத்திய மந்திரி அமித் ஷா தெரிவித்துள்ளார்.

Update: 2023-02-14 08:07 GMT

புதுடெல்லி,

2024 நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவுக்கு போட்டியே இல்லை என்று மத்திய மந்திரி அமித் ஷா தெரிவித்துள்ளார்.

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஏஎன்ஐ செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் தெரிவித்திருப்பதாவது:

2024-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் எங்களுக்கு போட்டி இல்லை என்று நம்புகிறேன். பிரதமர் மோடியுடன் சேர்ந்து நாடு முழு மனதுடன் முன்னேறி வருகிறது. மக்கள் தற்போது குடும்ப கட்சிகளின் ஆட்சியில் இருந்து மாறி பாஜகவின் வளர்ச்சி அரசியலை ஏற்றுக்கொண்டுள்ளனர்.

கர்நாடகாவில் பாஜக முழு பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும். கடந்த 2 மாதங்களில், நான் 5 முறை கர்நாடகாவிற்கு சென்றுள்ளேன். அந்த மாநில மக்கள் பிரதமர் மோடி மீது அதீத நம்பிக்கை வைத்துள்ளனர். எனவே கர்நாடகாவில் பாஜகவிற்கு மிகப்பெரிய வெற்றி கிடைக்கும்.

ராஜஸ்தான், கர்நாடகா, மத்திய பிரதேசம் மற்றும் சத்தீஸ்கர் ஆகிய நான்கு மாநிலங்களிலும் பாஜக வெற்றி பெறும். என தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்