நிதிஷ் குமார் வரும் 5 ஆம் தேதி டெல்லி பயணம்; எதிர்க்கட்சி தலைவர்களை சந்திக்க திட்டம்

பீகார் முதல் மந்திரி நிதிஷ் குமார் வரும் திங்கள் கிழமை டெல்லி செல்கிறார். தனது டெல்லி பயணத்தின் போது ராகுல் காந்தியை சந்திக்க உள்ளதாக தெரிகிறது.

Update: 2022-09-03 11:31 GMT

பாட்னா,

பீகார் முதல் மந்திரி நிதிஷ் குமார் வரும் 5 ஆம் தேதி டெல்லி செல்கிறார். இந்த டெல்லி பயணத்தின் போது ராகுல் காந்தி உள்பட எதிர்க்கட்சித்தலைவர்கள் பலரையும் சந்திக்க உள்ளார். வரும் 2024 ஆம் ஆண்டு நடைபெற உள்ள மக்களவை தேர்தலில் ஒருங்கிணைந்து தேர்தலை எதிர்கொள்வது குறித்தும் இதில் ஆலோசிக்கப்படலாம் என்று தெரிகிறது.

டெல்லி முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் இடதுசாரி தலைவர்களையும் நிதிஷ் குமார் சந்திக்க உள்ளதாக ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் கட்சி வட்டார தகவல்கள் கூறுகின்றன. பீகாரில் பாஜக உடனான கூட்டணியை முறித்துக்கொண்ட பிறகு நிதிஷ் குமார் டெல்லியில் எதிர்க்கட்சி தலைவர்களை சந்திக்க இருப்பது இதுவே முதல் முறையாகும்.

Tags:    

மேலும் செய்திகள்