காதலனை அடிக்கடி மாற்றும் வெளிநாட்டு பெண்ணை போன்றவர் நிதிஷ்குமார் - பாஜக நிர்வாகி சர்ச்சை கருத்து

வெளிநாடுகளில் ஆண் நண்பர்களை பெண்கள் மாற்றிக் கொள்வது போல நிதிஷ்குமார் கூட்டணியை மாற்றியுள்ளார் என பாஜகவின் மூத்த தலைவர் கைலாஷ் விஜய்வர்கியா தெரிவித்துள்ளார்.

Update: 2022-08-19 03:32 GMT

Image Courtesy: ANI 

இந்தூர்,

பீகார் மாநிலத்தில் பாஜக கூட்டணியில் இருந்து வெளியேறியே ஐக்கிய ஜனதாதளம் கட்சித் தலைவர் நிதிஷ்குமார், லாலுபிரசாத் யாதவின் ராஷ்டிரிய ஜனதாதளம் கட்சியுடன் மெகா கூட்டணி அமைத்ததுடன் மீண்டும் முதலமைச்சராக பதவியேற்றுள்ளார். அவரது இந்த நடவடிக்கையை பாஜக கடுமையாக விமர்சித்து வருகிறது.

மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் செய்தியாளர்களிடம் பேசிய பாஜக தேசிய பொதுச்செயலாளர் கைலாஷ் விஜய்வர்கியா, நிதிஷ்குமாரை வெளிநாட்டு பெண்களுடன் ஒப்பிட்டது சர்ச்சையை ஏற்படுத்தியது.

இது குறித்து அவர் கூறுகையில், 'தாம் வெளிநாட்டில் பயணம் மேற்கொண்டிருந்த போது அங்குள்ள பெண்கள் தங்களது காதலர்களை அடிக்கடி மாற்றிக் கொள்வார்கள் என ஒருவர் கூறினார். பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமாரும் அப்படித்தான். அவர் யாருடைய கையை பிடிக்கிறார், யாருடைய கையை விலக்குகிறார் என்பது அவருக்கே தெரியாது' இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

இதனிடையே எதிர்காலத்தில் லாலுபிரசாத் யாதவ் கட்சியுடன், ஐக்கிய ஜனதாதளம் இணைந்து விடும் என்று அக்கட்சியின் மூத்த தலைவர் ஆர்.பி.சிங், தெரிவித்திருந்தார். இது குறித்து நிதிஷ்குமாரிடம் செய்தியாளர்கள் கேட்டபோது அவரது கணிப்பை நிராகரிப்பதாக கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்