நிர்மலா சீதாராமனுக்கு இந்திய பொருளாதாரம் பற்றி எந்த புரிதலும் இல்லை - ராகுல் காந்தி

மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமனுக்கு இந்திய பொருளாதாரம் பற்றி எந்த புரிதலும் இல்லை என ராகுல் காந்தி குற்றஞ்சாட்டி உள்ளார்.

Update: 2022-08-05 07:02 GMT

புதுடெல்லி:

விலைவாசி உயர்வு, வேலையில்லா திண்டாட்டம் மற்றும் அமலாக்கத்துறை சோதனையை கண்டித்து நாடு முழுவதும் இன்று காங்கிரஸ் கட்சியினர் போராட்டம் நடத்தினார்கள். டெல்லியில் ஜனாதிபதியை சந்தித்து காங்கிரசார் மனு கொடுக்க குவிந்தனர்.

பிரதமர் மோடி வீட்டையும் முற்றுகையிடும் போராட்டத்துக்காக காங்கிரசார் திரண்டதால் பதற்றம் உருவானது. போராட்டக்காரர்கள், போலீசார் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. காங்கிரசார் போராட்டத்தை தொடர்ந்து டெல்லியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அதையும் மீறி காங்கிரசார் போராட்டம் நடத்தினார்கள்.

பின்னர் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

நாடு முழுவதும் வேலை இல்லா திண்டாட்டம் தலைவிரித்து ஆடுகிறது. அனைத்து பொருட்களின் விலையும் கடுமையாக உயர்ந்து விட்டது. மக்கள் படும் இன்னல்கள் பற்றி மத்திய நிதி மந்திரிக்கு ஒன்றும் தெரியவில்லை. மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமனுக்கு இந்திய பொருளாதாரம் பற்றி எந்த புரிதலும் இல்லை. அவர் வெறும் ஊதுகுழலாக மட்டுமே செயல்படுகிறார்.

ஹிட்லரும்தான் அனைத்து தேர்தல்களிலும் வென்றார். அவர் எவ்வாறு வெற்றி பெற்றார். ஜெர்மனியின் அனைத்து அமைப்புகளை அவர் தனது கட்டுப்பாட்டில் வைத்து இருந்தார்.என்னிடம் ஒட்டுமொத்த சிஸ்டத்தை கொடுங்கள். தேர்தலில் எப்படி வெல்கிறார்கள் என்பதை காண்பிக்கிறேன் என கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்