புதுச்சேரியில் ஒருவருக்கு நிபா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல்
புதுச்சேரியில் ஒருவருக்கு நிபா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
புதுச்சேரி,
கேரளாவில் கடந்த சில தினங்களுக்கு முன்பு நிபா வைரஸ் பாதிப்புக்கு 2 பேர் உயிரிழந்தனர். மேலும் சிலர் நிபா வைரசால் பாதிக்கப்பட்டனர். இதனை தொடர்ந்து, அம்மாநில சுகாதாரத்துறை தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதுடன், வைரஸ் பரவல் கட்டுக்குள் வந்தது என்றும் அறிவித்து உள்ளது.
இந்த நிலையில், புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் ஒருவருக்கு நிபா வைரஸ் பாதிப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பரிசோதனையில் நிபா பாதிப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளதாக ஜிப்மர் மருத்துவமனை நிர்வாகம் தகவல் தெரிவித்து உள்ளது.
இதனை தொடர்ந்து, ஜிப்மர் மருத்துவமனைக்கு வருவோர் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என ஜிப்மர் மருத்துவமனை நிர்வாகம் அறிவுறுத்தி உள்ளது.