லாரி - ஜீப் - பைக் மோதி கோர விபத்து: 9 பேர் பலி

லாரி - ஜீப் - பைக் என 3 வாகனங்கள் அடுத்தடுத்து மோதி விபத்துக்குள்ளான சம்பவத்தில் 9 பேர் உயிரிழந்தனர்.

Update: 2024-02-25 21:33 GMT

பாட்னா,

பீகார் மாநிலம் கைமூர் மாவட்டம் மோகனியா நகரில் உள்ள நெடுஞ்சாலையில் நேற்று மாலை ஒரு ஜீப் சென்றுகொண்டிருந்தது. அதில் 2 பெண்கள் உள்பட 8 பேர் பயணித்தனர்.

தேவ்காளி என்ற கிராமம் அருகே சென்றபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த ஜீப் முன்னே சென்றுகொண்டிருந்த பைக் மீது மோதியது. பின்னர், ஜீப்பும், பைக்கும் சாலையின் எதிரே வந்துகொண்டிருந்த லாரி மீது மோதின. இந்த கோர விபத்தில் 9 பேர் உயிரிழந்தனர்.

இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் தப்பியோடிய லாரி டிரைவரை தீவிரமாக தேடி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்