ஜம்மு-காஷ்மீரில் என்.ஐ.ஏ. அதிரடி சோதனை...!

ஜம்மு-காஷ்மீர் தலைநகர் ஸ்ரீநகரில் ஜி20 மாநாடு நடைபெற உள்ளது.

Update: 2023-05-20 05:47 GMT

ஸ்ரீநகர்,

நடப்பு ஆண்டு ஜி20 அமைப்பிற்கு இந்தியா தலைமை ஏற்றுள்ளது. அதன்படி, ஜி20 கூட்டமைப்பின் மாநாடு இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் சுற்றுலா துறை தொடர்பான ஜி20 மாநாடு வரும் 22-ம் தேதி ஜம்மு-காஷ்மீர் தலைநகர் ஸ்ரீநகரில் நடைபெற உள்ளது.

காஷ்மீரில் ஜி20 மாநாடு நடைபெற உள்ள நிலையில் அங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. ராணுவம், என்.எஸ்.ஜி. (தேசிய பாதுகாப்பு படை), மார்கோஸ் படையினர் (கடற்படை சிறப்பு கமாண்டோ வீரர்கள்), எல்லைப்பாதுகாப்பு படையினர், மத்திய ரிசர்வ் போலீஸ் படையினர், ஷாஷ்த்ரா சீமா பெல் படையினர் (இந்தோ-நேபாள், இந்தோ-பூட்டான் எல்லைப்பாதுகாப்பு படையினர்), காஷ்மீர் போலீசார் என பல அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

இந்நிலையில், ஜம்மு-காஷ்மீரின் பல்வேறு மாவட்டங்களில் இன்று என்.ஐ.ஏ. அதிகாரிகள் (தேசிய புலனாய்வு அமைப்பு) அதிரடி சோதனை நடத்தி வருகிறது. பயங்கரவாதம் தொடர்பான வழக்கில் ஸ்ரீநகர், புல்வாமா, அவந்திபுரா, அனந்த்நாக், சோபியான், பூஞ்ச், குப்வாரா என 7 மாவட்டங்களில் 15 இடங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். இந்த சோதனையில் முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.   

Tags:    

மேலும் செய்திகள்