ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் நிர்வாகி கொலை - முக்கிய குற்றவாளியை கைது செய்த என்.ஐ.ஏ.

2022ம் ஆண்டு ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் நிர்வாகி சீனிவாசன் படுகொலை செய்யப்பட்டார்.

Update: 2023-10-20 16:13 GMT

திருவனந்தபுரம்,

கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் மேலமுரி பகுதியை சேர்ந்தவர் சீனிவாசன். ஆர்.எஸ்.எஸ். அமைப்பை சேர்ந்த சீனிவாசன் மேலமுரியில் பைக் பழுதுபார்க்கும் கடை வைத்திருந்தார். இதனிடையே, கடந்த ஆண்டு ஏப்ரல் 16ம் தேதி சீனிவாசன் தனது கடையில் வைத்து 6 பேர் கொண்ட கும்பலால் கொடூரமான கொலை செய்யப்பட்டார். இந்த கொலை தொடர்பாக எஸ்டிபிஐ மற்றும் தடை செய்யப்பட்ட பிஎப்ஐ அமைப்புகளை சேர்ந்தவர்கள் 20க்கு மேற்பட்டோரை போலீசார் கைது செய்துள்ளனர்.

இதனிடையே, இந்த கொலை வழக்கு கடந்த டிசம்பர் மாதம் என்.ஐ.ஏ. வசம் ஒப்படைக்கப்பட்டது. இந்த கொலை வழக்கை என்.ஐ.ஏ. விசாரித்து வந்தது. இந்த வழக்கில் 69 பேருக்கு தொடர்பு உள்ளதாக என்.ஐ.ஏ. வழக்குப்பதிவு செய்துள்ளது.

இந்நிலையில், ஆர்.எஸ்.எஸ். நிர்வாகி சீனிவாசன் கொலை வழக்கில் தலைமறைவாக இருந்த முக்கிய குற்றவாளி ஷிகப்பை என்.ஐ.ஏ. இன்று கைது செய்தது. மலப்புரம் மாவட்டத்தில் தலைமறைவாக இருந்த ஷிகப்பை என்.ஐ.ஏ. அதிகாரிகள் இன்று கைது செய்தனர். ஷகப் தடைசெய்யப்பட்ட பிஎப்ஐ அமைப்பை சேர்ந்தவர் என என்.ஐ.ஏ. தெரிவித்துள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்