காங்கிரஸ் எம்.பி கார்த்தி சிதம்பரத்தின் ஆடிட்டர் கைது
காங்கிரஸ் எம்.பி கார்த்தி சிதம்பரத்தின் ஆடிட்டரை சிபிஐ கைது செய்தது.
புதுடெல்லி,
விசா முறைகேடு வழக்கில் காங்கிரஸ் எம்.பி. கார்த்தி சிதம்பரத்தின் கணக்கு தணிக்கையாளர் (ஆடிட்டர்) பாஸ்கர் ராமனை சிபிஐ கைது செய்தது.
கார்த்தி சிதம்பரம் மற்றும் பாஸ்கர ராமனின் வீடு அலுவலகங்களில் நேற்று நடத்திய சோதனையை தொடர்ந்து கைது நடவடிக்கை எடுக்கப்பட்டதாக சிபிஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சீனர்களுக்கு விசா வாங்கி தந்தற்கு ரூ 50 லட்சம் லஞ்சம் பெற்ற புகாரில் சிபிஐ அதிகாரிகள் அவரை கைது செய்தனர்.