ஆழ்துளை கிணறுகளை பயன்படுத்த புதிய கட்டுப்பாடு.!

ஆழ்துளை கிணறுகளை பயன்படுத்த மத்திய நிலத்தடி நீர் ஆணையத்திடம் தடையில்லா சான்றிதழ் பெற 2 ஆயிரம் விண்ணப்பங்கள் மட்டுமே பெறப்பட்டுள்ளன.

Update: 2022-07-04 16:56 GMT

கோப்புப்படம்

புதுடெல்லி,

வணிக ரீதியாக ஆழ்துளை கிணறுகளை பயன்படுத்த மத்திய நிலத்தடி நீர் ஆணையத்திடம் தடையில்லா சான்றிதழ் பெற வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், நாடு முழுவதும் இருந்து 2 ஆயிரம் விண்ணப்பங்கள் மட்டுமே பெறப்பட்டுள்ளன.

நிலத்தடி நீரின் பயன்பாட்டை கட்டுப்படுத்த மத்திய நிலத்தடி நீர் ஆணையத்திடம் ஜூன் 30-க்குள் ஆழ்துளை கிணறுகளுக்கு தடையில்லா சான்றிதழ் பெற வேண்டுமென்று தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டிருந்தது. அடுக்கு மாடி குடியிருப்புகள், நகர்ப்புற குடிநீர் விநியோக அமைப்புகள், கட்டுமான திட்டங்கள், சுரங்கங்கள், நீச்சல் குளங்கள் உள்ளிட்ட குறிப்பிட்ட சில பிரிவினருக்கு இந்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.

தடையில்லா சான்றிதழ் பெறாமல், ஆழ்துளை கிணறுகளை வணிக ரீதியாக பயன்படுத்துபவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது. இதற்கான கடைசி தேதி முடிவடைந்துள்ள நிலையில், நாடு முழுவதும் இருந்து 2 ஆயிரம் விண்ணப்பங்கள் மட்டுமே இதுவரை வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்