கர்நாடகத்தில் புதிதாக 491 பேருக்கு கொரோனா

கர்நாடகத்தில் புதிதாக 491 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

Update: 2022-09-08 22:04 GMT

பெங்களூரு: கர்நாடகத்தில் நேற்று 20 ஆயிரத்து 672 பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. இதில் 491 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் பெங்களூரு நகரில் 262 பேருக்கும், ஹாசனில் 20 பேருக்கும், குடகில் 9 பேருக்கும், கோலாரில் 7 பேருக்கும், மைசூருவில் 23 பேருக்கும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

நேற்று 3 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். ஒரே நாளில் 884 பேர் குணம் அடைந்தனர். 4 ஆயிரத்து 330 பேர் மருத்துவ சிகிச்சையில் உள்ளனர். கொரோனா பாதிப்பு விகிதம் 2.37 ஆக உள்ளது. மேற்கண்ட தகவலை சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்