கர்நாடகத்தில் புதிதாக 1,186 பேருக்கு கொரோனா

கர்நாடகத்தில் புதிதாக 1,186 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

Update: 2022-08-27 21:56 GMT

பெங்களூரு: கர்நாடக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- கர்நாடகத்தில் நேற்று 27, 562 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் புதிதாக 1,186 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. பெங்களூருவில் அதிகபட்சமாக 635 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மைசூருவில் 121 பேருக்கு கொரோனா உறுதியானது.

நேற்று ஒரே நாளில் ஆஸ்பத்திரியில் இருந்து 1,118 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். நேற்று பல்லாரி, சிவமொக்கா மாவட்டத்தில் தலா ஒருவர் என மொத்தம் 2 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். கொரோனா பாதிப்பு விகிதம் 4.30 சதவீதமாக உள்ளது.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருந்தது.

Tags:    

மேலும் செய்திகள்