வங்கக்கடலில் உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி - இந்திய வானிலை ஆய்வு மையம்

வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி நாளை உருவாகிறது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Update: 2023-08-17 04:18 GMT

புதுடெல்லி,

தென்மேற்கு பருவமழை தொடங்கியதிலிருந்தே வடமாநிலங்களில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. தென்மேற்கு பருவமழையால் மிகவும் மோசமான பாதிப்புகளை வடமாநிலங்கள் எதிர்கொண்டுள்ளன. தமிழகத்திலும் ஒரு சில இடங்களில் அவ்வப்போது மிதமான மழை முதல் கனமழை பெய்து வருகிறது.

இந்த நிலையில், வடக்கு வங்கக்கடல் மற்றும் அதை ஒட்டிய பகுதிகளில் நாளை குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்காலில் இன்று முதல் 7 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்