தொடர்ந்து கனமழை: அசாமில் வெள்ளப்பெருக்கால் 29,000 பேர் பாதிப்பு

அசாமில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் சுமார் 29,000 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Update: 2023-06-15 19:33 GMT

கோப்புப்படம்

கவுகாத்தி,

அசாமின் தெமாஜி, திப்ருகர், லகிம்பூர் மாவட்டங்களில் விட்டுவிட்டு கனமழை பெய்து வருகிறது. இதனால் தாழ்வான பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. இந்த வெள்ளப்பெருக்கு நாளுக்கு நாள் மோசமடைந்து வருகிறது.

இந்த மழை மற்றும் வெள்ளப்பெருக்கால் சுமார் 29,000 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். குறிப்பாக அதிக பாதிப்புக்குள்ளாகி இருக்கும் லகிம்பூர் மாவட்டத்தில் மட்டுமே 23 ஆயிரத்துக்கும் அதிகமானோர் சிரமங்களை எதிர்கொண்டுள்ளனர்.அசாமில் 25 கிராமங்கள் வெள்ளத்தில் சிக்கியுள்ளன. 215 ஹெக்டேரில் விவசாய பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளன.

பாதிக்கப்பட்ட மக்களுக்காக நிவாரண மையங்கள் திறக்கப்பட்டு உள்ளன.இதற்கிடையே சச்சார், காம்ரப் பகுதிகளில் கனமழையால் பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டு உள்ளன. மழை, வெள்ளம் மற்றும் நிலச்சரிவு சம்பவங்களால் மாநிலத்தின் பல பகுதிகளில் சாலைகள், பாலங்கள், தண்டவாளங்கள் பாதிக்கப்பட்டு உள்ளன. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டு உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்