தரிகெரே அருகே விவசாயி அடித்து கொலை; 3 பேர் கைது

தரிகெரே அருகே விவசாயி அடித்து கொலை செய்த வழக்கில் 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2023-06-12 18:45 GMT

சிக்கமகளூரு-

சிக்கமகளூரு மாவட்டம் தரிகெரே தாலுகா அமிர்தாபுரா கிராமத்தை சேர்ந்தவர் சிவமூர்த்தி (வயது 40). இவருக்கு சொந்தமான நிலம் அப்பகுதியில் உள்ளது. இவரது நிலத்தின் அருகே அதேப்பகுதியை சேர்ந்த ஒருவருக்கும் இடம் உள்ளது. இந்தநிலையில் நிலம் தொடர்பாக அவர்கள் இடையே பிரச்சினை இருந்து வந்தது. இந்தநிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு சிவமூர்த்தி தனது நிலத்திற்கு சென்றார். அப்போது பக்கத்து நிலத்தின் உரிமையாளருக்கும், அவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இந்த தகராறு முற்றி கைகலப்பாக மாறியது. இதையடுத்து அவர்கள் 2 பேரையும் அருகில் இருந்தவர்கள் சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர்.

இந்தநிலையில் சிவமூர்த்தி அப்பகுதியில் நடந்து சென்று கொண்டு இருந்தார். அப்போது அந்த வழியாக வந்த 3 பேர் அவரை வழிமறித்து கட்டையால் தாக்கிவிட்டு தப்பி சென்றனர். இதில் சிவமூர்த்தி படுகாயம் அடைந்தார். அவரை அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு தரிகெரே அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். ஆனால் ஆஸ்பத்திரிக்கு செல்லும் வழியிலேயே பரிதாபமாக இறந்தார். ,இதுகுறித்து தகவல் அறிந்த தரிகெரே போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சிவமூர்த்தியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து தரிகெரே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்தநிலையில், கொலை தொடர்பாக அதேப்பகுதியை சேர்ந்த 3 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்கள் 3 பேரிடமும் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.  

Tags:    

மேலும் செய்திகள்