பட்கல் அருகே நடுக்கடலில் பாறையில் மோதி படகு மூழ்கியது 7 மீனவர்கள் பத்திரமாக மீட்பு
பட்கல் அருகே நடுக்கடலில் பாறையில் மோதி படகு மூழ்கியது. அந்த படகில் இருந்த 7 மீனவர்களும் பத்திரமாக மீட்கப்பட்டனர்.
மங்களூரு-

பாறையில் படகு மோதியது
உடுப்பி மாவட்டம் மல்பே துறைமுகத்தில் இருந்து கடந்த 21-ந்தேதி ரஹில் என்பவருக்கு சொந்தமான 'சீ பேர்ட்' என்ற படகில் 7 பேர் ஆழ்கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். அப்போது அவர்கள் உத்தரகன்னடா மாவட்டம் பட்கல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் நடுக்கடலில் மீன்பிடித்து கொண்டிருந்தனர். அப்போது நடுக்கடலில் பலத்த காற்றுடன் கனமழை கொட்டியது.
பலத்த காற்று வீசியதால் படகு அவர்களின் கட்டுப்பாட்டை இழந்தது. மேலும் நடுக்கடலில் இருந்த பாறையில் படகு மோதியது. இதில் படகு உடைந்து தண்ணீர் உள்ளே புகுந்தது. இதனால் படகு சிறிது, சிறிதாக கடலில் மூழ்க தொடங்கியது.
7 மீனவர்கள் மீட்பு
இதனால் அதிர்ச்சி அடைந்த மீனவர்கள் உடனடியாக, அருகில் மீன்பிடித்து கொண்டிருந்த மீனவர்களுக்கு தகவல் தெரிவித்தனர். இதனை அறிந்ததும் அருகில் 'பவனா புத்ரா 111' என்ற படகில் மீன்பிடித்து கொண்டிருந்தவர்கள் விரைந்து வந்தனர். அவர்கள் கயிறு கட்டி படகை மீட்க முயற்சி மேற்கொண்டனர். ஆனால் கயிறு அறுந்ததால் படகு கடலுக்குள் மூழ்கியது.
இதையடுத்து அந்த படகில் இருந்த 7 மீனவர்களையும் மற்றொரு படகில் வந்த மீனவர்கள் பத்திரமாக மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர். நடுக்கடலில் படகு மூழ்கியதால் ரூ.45 லட்சம் இழப்பு ஏற்பட்டுள்ளது.மங்களூரு, ேம.24-
பட்கல் அருகே நடுக்கடலில் பாறையில் மோதி படகு மூழ்கியது. அந்த படகில் இருந்த 7 மீனவர்களும் பத்திரமாக மீட்கப்பட்டனர்.
பாறையில் படகு மோதியது
உடுப்பி மாவட்டம் மல்பே துறைமுகத்தில் இருந்து கடந்த 21-ந்தேதி ரஹில் என்பவருக்கு சொந்தமான 'சீ பேர்ட்' என்ற படகில் 7 பேர் ஆழ்கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். அப்போது அவர்கள் உத்தரகன்னடா மாவட்டம் பட்கல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் நடுக்கடலில் மீன்பிடித்து கொண்டிருந்தனர். அப்போது நடுக்கடலில் பலத்த காற்றுடன் கனமழை கொட்டியது.
பலத்த காற்று வீசியதால் படகு அவர்களின் கட்டுப்பாட்டை இழந்தது. மேலும் நடுக்கடலில் இருந்த பாறையில் படகு மோதியது. இதில் படகு உடைந்து தண்ணீர் உள்ளே புகுந்தது. இதனால் படகு சிறிது, சிறிதாக கடலில் மூழ்க தொடங்கியது.
7 மீனவர்கள் மீட்பு
இதனால் அதிர்ச்சி அடைந்த மீனவர்கள் உடனடியாக, அருகில் மீன்பிடித்து கொண்டிருந்த மீனவர்களுக்கு தகவல் தெரிவித்தனர். இதனை அறிந்ததும் அருகில் 'பவனா புத்ரா 111' என்ற படகில் மீன்பிடித்து கொண்டிருந்தவர்கள் விரைந்து வந்தனர். அவர்கள் கயிறு கட்டி படகை மீட்க முயற்சி மேற்கொண்டனர். ஆனால் கயிறு அறுந்ததால் படகு கடலுக்குள் மூழ்கியது.
இதையடுத்து அந்த படகில் இருந்த 7 மீனவர்களையும் மற்றொரு படகில் வந்த மீனவர்கள் பத்திரமாக மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர். நடுக்கடலில் படகு மூழ்கியதால் ரூ.45 லட்சம் இழப்பு ஏற்பட்டுள்ளது.