மங்களூரு அருகேகஞ்சா விற்ற 2 பேர் கைது

மங்களூரு அருகே கஞ்சா விற்ற 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2023-03-28 04:30 GMT

மங்களூரு-

தட்சிண கன்னடா மாவட்டம் மங்களூரு அருகே சூரத்கல் இட்யா கிராமத்தில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக சூரத்கல் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்றனர். அங்கு சோதனையில் ஈடுபட்டனர். அப்போது கோவிந்த தாசா கல்லூரி அருகே நின்று கொண்டிருந்த 2 பேர், போலீசாரை பார்த்ததும் ஓடினர். அவர்களை துரத்தி சென்று போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள், ஒடிசாவை சேர்ந்த சிந்தாமணி, துபா என்பதும்,

அந்தப்பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதும் தெரியவந்தது. குறிப்பாக கல்லூரி மாணவர்களை குறிவைத்து கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்துள்ளனர் என்பது தெரியவந்தது. இதையடுத்து அவர்களை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 3 கிேலா கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுகுறித்து சூரத்கல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்