மண்டியா அருகே 30 அடி கிணற்றுக்குள் கிடந்த பச்சிளம் ஆண் குழந்தை மீட்பு

மண்டியா அருகே 30 அடி கிணற்றுக்குள் கிடந்த பச்சிளம் ஆண் குழந்தையை மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்

Update: 2022-09-17 18:45 GMT

மண்டியா:

.மண்டியா அருகே சந்த்ரே கிராமத்தில் உள்ள தண்ணீர் இல்லாத கிணற்றில் இருந்து குழந்தையின் அழுகுரல் கேட்டது. இதனை கேட்ட அந்தப்பகுதி மக்கள், கிணற்றின் அருகே சென்று பார்த்தனர். அப்போது 30 அடி கிணற்றுக்குள் பிளாஸ்டிக்கால் சுற்றப்பட்ட நிலையில் பச்சிளம் குழந்தை அழுது கொண்டிருந்தது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அந்தப்பகுதி மக்கள், கிணற்றுக்குள் இறங்கி கயிறு கட்டி பச்சிளம் குழந்தையை மீட்டனர். அது பச்சிளம் ஆண் குழந்தை என்பது தெரியவந்தது. இதையடுத்து அந்த குழந்தையை ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு அனுப்பி வைத்தனர். அங்கு குழந்தைக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. அப்போது குழந்தை ஆரோக்கியமாக இருப்பதாக தெரிவித்தனர். மேலும் குழந்தையின் உடலில் லேசான காயங்கள் இருந்தன. இதையடுத்து குழந்தை மண்டியாவில் உள்ள மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதுகுறித்து குழந்தைகள் நலத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள். இதுகுறித்து மண்டியா போலீசார் வழக்குப்பதிவு செய்து, குழந்தையை கிணற்றுக்குள் வீசிய கல்நெஞ்சம் கொண்ட தாய் யார்? என்பது குறித்து விசாரித்து வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்