தரிகெரே அருகே அணைக்கட்டில் முதலை நடமாட்டம்

தரிகெரே அருகே அணைக்கட்டில் முதலை நடமாட்டத்தால் கிராம மக்கள் பீதியுள்ளனர்.

Update: 2022-10-19 19:00 GMT

சிக்கமகளூரு;


சிக்கமகளூரு மாவட்டம் தரிகெரே தாலுகா ஜாம்பதஹள்ளி கிராமத்தில் ஒரு சிறிய அணைக்கட்டு உள்ளது. இந்த கிராம பகுதியில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வந்தது. இதனால் அந்த அணைக்கட்டிற்கு தண்ணீர் வரத்து வெகுவாக அதிகாித்தது. இந்த நிலையில் அந்த அணைக்கட்டுக்கு வந்த தண்ணீரில் முதலை ஒன்று அடித்து வரப்பட்டது.

அந்த முதலை அணைக்கட்டின் தடுப்புச் சுவரில் கிடந்துள்ளது. இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த அந்த பகுதி மக்கள், முதலையை தங்களது செல்போன்களில் வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் வெளியிட்டனர். அந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது.

மேலும் முதலை குறித்து கிராம பஞ்சாயத்து அதிகாரிகளுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் அதிகாரிகள் அந்த பகுதிக்கு வந்து பார்வையிட்டனர். இதுகுறித்து கிராம பஞ்சாயத்து அதிகாரிகள் கூறுகையில், மக்கள் யாரும் அணைக்கட்டு பகுதிக்கு செல்லவேண்டாம் எனவும், அணைக்கட்டில் குளிக்கவேண்டாம் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளனர். மேலும் முதலை நடமாட்டத்தால் அந்த பகுதி மக்கள் பீதியில் உள்ளனர்.

மேலும் செய்திகள்