பெல்தங்கடி அருகே மரக்கிளை விழுந்து பெண் பலி

பெல்தங்கடி அருகே மரக்கிளை விழுந்து பெண் பலியானார்.

Update: 2023-04-28 18:45 GMT

மங்களூரு-

தட்சிண கன்னடா மாவட்டம் பெல்தங்கடி தாலுகா ஹல்லிங்கேரி, கொக்கடா கிராமத்தைச் சேர்ந்தவர் தாமோதர ஆச்சார்யா. இவரது மனைவி காயத்ரி (வயது 55). இந்தநிலையில் அந்தப்பகுதியில் மரம் வெட்டும் பணி நடந்தது. இதில் 4-க்கும் மேற்பட்ட தொழிலாளிகள் ஈடுபட்டனர். அப்போது மரத்தின் அடியில் காயத்ரி நின்று கொண்டு இருந்தார்.

அந்த நிலையில் மரக்கிளை ஒன்று காயத்ரி தலை மீது விழுந்தது. இதில் காயத்ரி படுகாயம் அடைந்தார். அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் ஆஸ்பத்திரிக்கு செல்லும் வழியிலேயே காயத்ரி பரிதாபமாக இறந்தார்.   இதுகுறித்து தர்மஸ்தலா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 

Tags:    

மேலும் செய்திகள்