இளம்பெண்ணிடம் ஆடையின்றி வீடியோ காலில் பேசிய விவகாரம்; ஆந்திரா எம்.பி. மீது நடவடிக்கை எடுக்க மகளிர் ஆணையம் கடிதம்

ஆந்திர எம்.பி. கோரண்ட்லா மாதவ் மீது பெண்களுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

Update: 2022-08-11 14:22 GMT

புதுடெல்லி,

ஆந்திர பிரதேசத்தின் இந்துபுரம் தொகுதி எம்.பி.யாக உள்ள கோரண்ட்லா மாதவ் மீது பெண்களுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல் புகார் அளிக்கப்பட்டுள்ளதாகவும் இதனையடுத்து அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தேசிய மகளிர் ஆணையம் தெரிவித்துள்ளது.

ஆந்திரா மாநிலம் அனந்தபுரம் மாவட்டம் இந்துபுரம் எம்.பி.யாக இருப்பவர் கோரண்ட்லா மாதவ் (வயது 45). கடந்த வாரம் கோரண்ட்லா மாதவ் இளம்பெண் ஒருவருக்கு நிர்வாண நிலையில் வீடியோ காலில் போன் செய்து 30 நிமிடம் வந்து சென்றால் உடற்பயிற்சி செய்து அனுப்புகிறேன் என கூறியுள்ளார்.

எம்.பி. பேசிய வீடியோ கால் பதிவு செய்யப்பட்டு சமூக வலைதளங்களில் பரவி வைரலானது. இதனைக் கண்ட அரசியல் கட்சியினர் மற்றும் பொதுமக்கள் அவருக்கு எதிராக கருத்துக்களை பதிவிட்டனர்.

இவ்விவகாரம் பெரும் சர்ச்சையானது. தன் மீதான குற்றச்சாட்டுகளை அவர் மறுத்தார்.

இந்ந்நிலையில், இது தொடர்பாக, மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு மகளிர் ஆணையம் கடிதம் எழுதியுள்ளது.

எம்.பி கோரண்ட்லா மாதவ் மீதான புகாரில், வீடியோ அழைப்பு வாயிலாக பேசும்போது அவர் வேண்டுமென்றே அநாகரிகமாக ஆடையின்றி இருந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த வீடியோவில் அவர் நடந்து கொண்ட முறை, ஏற்றுக்கொள்ள முடியாத வகையில் இருந்ததாக மகளிர் ஆணையம் தெரிவித்துள்ளது.

இவ்விவகாரம் குறித்து தனிப்பட்ட முறையில் உரிய விசாரணை நடத்துமாறு ஆந்திர பிரதேச போலீஸ் டிஜிபிக்கு தேசிய மகளிர் ஆணையத்தின் தலைவர் ரேகா சர்மா கடிதம் மூலம் வலியுறுத்தியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்