ஒருங்கிணைந்த ஆசிரியர் கல்வி திட்டம்: நாடு முழுவதும் 57 கல்வி நிறுவனங்களில் அறிமுகம்

ஒருங்கிணைந்த ஆசிரியர் கல்வி திட்டம், நாடு முழுவதும் 57 கல்வி நிறுவனங்களில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

Update: 2023-03-04 22:47 GMT

புதுடெல்லி,

2020-ம் ஆண்டு தேசிய கல்வி கொள்கையின் முதன்மை திட்டமான நான்காண்டு ஒருங்கிணைந்த ஆசிரியர் கல்வி திட்டம் கடந்த 2021-ம் ஆண்டு அக்டோபர் மாதம் அறிவிக்கப்பட்டது. இதன்படி, பி.ஏ., பி.எஸ்சி. மற்றும் பி.காம். படிப்புகளுடன் பி.எட். பட்டம் வழங்கப்படும்.

இந்த திட்டத்தை ஆசிரியர் கல்விக்கான தேசிய கவுன்சில் தற்போது (2023-2024-ம் கல்வியாண்டு) நாடு முழுவதும் 57 ஆசிரியர் கல்வி நிறுவனங்களில் தொடங்கி உள்ளது. இதை மத்திய கல்வி அமைச்சகம் தெரிவித்திருக்கிறது.

இந்த திட்டம், புகழ்பெற்ற மத்திய, மாநில அரசு பல்கலைக்கழகங்கள் மற்றும் நிறுவனங்களில் முன்னோடி முறையில் வழங்கப்படுகிறது. 2-ம் நிலைக்கு பிறகு, விருப்பப்படி கற்பித்தலை தொழிலாக தேர்ந்தெடுக்கும் அனைத்து மாணவர்களும் ஒருங்கிணைந்த ஆசிரியர்கல்வி திட்டத்தில் பயிலலாம். இந்த பாடமுறையில் மாணவர்களுக்கு ஒரு ஆண்டு மிச்சப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்