இயற்கை எரிவாயு விலை 40 சதவீதம் உயர்வு..!

இயற்கை எரிவாயு விலை 40 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது.

Update: 2022-09-30 16:11 GMT

கோப்புப்படம்

புதுடெல்லி,

மின்சாரம், உரம், சி.என்.ஜி. வாயு, குழாய்வழியாக வீடுகளுக்கு வினியோகிக்கப்படும் சமையல் எரிவாயு ஆகியவற்றின் உற்பத்திக்கு இயற்கை எரிவாயு பயன்படுத்தப்படுகிறது. இயற்கை எரிவாயு விலையை 6 மாதங்களுக்கு ஒருமுறை மத்திய அரசு நிர்ணயிக்கிறது.

இந்த நிலையில், இயற்கை எரிவாயு விலை 40 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது.

பொதுத்துறை நிறுவனமான ஓ.என்.ஜி.சி.க்கு சொந்தமான பழைய எண்ணெய் வயல்களில் எடுக்கப்படும் இயற்கை எரிவாயுக்கு இந்த விலை உயர்வு பொருந்தும். ஓ.என்.ஜி.சி. நிறுவனத்தின் வயல்களில் எடுக்கப்படும் இயற்கை எரிவாயுவின் விலை 6.1 டாலரில் இருந்து 8.57 டாலராக உயர்கிறது. ரிலையன்ஸ் நிறுவனத்தின் வயல்களில் எடுக்கப்படும் இயற்கை எரிவாயுவின் விலை 9.92 டாலரில் இருந்து 12.6 டாலராக உயர்த்தப்பட்டுள்ளது.

இந்த விலை உயர்வால், சி.என்.ஜி. எரிவாயு மற்றும் வீடுகளுக்கு குழாய்வழியாக வினியோகிக்கப்படும் சமையல் எரிவாயு விலை உயரும் என்று தெரிகிறது.

Tags:    

மேலும் செய்திகள்