வலைத்தளங்களில் குழந்தைகள் பாலியல் படங்கள்: மத்திய, மாநில அரசுகளுக்கு தேசிய மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்
பாலியல் வன்முறை புகைப்படங்கள், வீடியோக்கள் வெளியாவது 300 சதவீதம் வரை அதிகரித்து இருப்பதாக ஊடகங்களில் செய்தி வெளியாகி உள்ளது.
புதுடெல்லி, மே.17-
இந்தியாவில் சமூக வலைத்தளங்களில் குழந்தைகள் பாலியல் வன்முறை புகைப்படங்கள், வீடியோக்கள் வெளியாவது 300 சதவீதம் வரை அதிகரித்து இருப்பதாக ஊடகங்களில் செய்தி வெளியாகி உள்ளது.
தேசிய மனித உரிமை ஆணையம், இதை தானாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துள்ளது. இச்செயல், குழந்தைகளின் மனித உரிமைகளை மீறக்கூடியது என்று கவலை தெரிவித்துள்ளது. எனவே, இத்தகைய படங்கள் வெளியாவதை தடுக்க என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என்பது குறித்து 6 வாரங்களுக்குள் விரிவான அறிக்கை தாக்கல் செய்யுமாறு மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்துக்கும், அனைத்து மாநில, யூனியன் பிரதேச போலீஸ் டி.ஜி.பி.களுக்கும் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.