குஜராத்: பாலியல் பலாத்கார வழக்கு கைதிகள் விடுவிப்பு - ராகுல் காந்தி கண்டனம்

பெண் சக்தி பற்றி பொய் பேசுபவர்களால் பெண்களுக்கு என்ன செய்தி கொடுக்கப்படுகிறது? என ராகுல்காந்தி கேள்வி எழுப்பி உள்ளார்.

Update: 2022-08-17 09:19 GMT

புதுடெல்லி,

குஜராத் மாநிலத்தில் கடந்த 2002-ம் ஆண்டு கோத்ரா சம்பவத்துக்கு பிறகு, பில்கிஸ் பானு என்பவரின் குடும்பத்தை சேர்ந்த 7 பேர் படுகொலை, கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டனர். இந்த வழக்கில் 11 பேர் கைது செய்யப்பட்டு, அவர்களுக்கு மும்பை ஐகோர்ட்டு ஆயுள் தண்டனை விதித்தது. கடந்த 15 ஆண்டுகளாக சிறையில் இருந்த அவர்களை கருணை அடிப்படையில் குஜராத் அரசு சுதந்திர தினத்தன்று விடுதலை செய்தது.

இவர்கள் விடுவிக்கப்பட்டதற்கு காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு எதிர்க்கட்சி தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர். இந்நிலையில் குற்றவாளிகள் விடுவிக்கப்பட்டதற்கு ராகுல்காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்ட டுவிட்டர் பதிவில்,

"5 மாத கர்ப்பிணி பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்து 3 வயது சிறுமியை கொன்றவர்கள் சுதந்திர திருநாள் அமுத பெருவிழாவின் போது விடுவிக்கப்பட்டனர். பெண் சக்தி பற்றி பொய் பேசுபவர்களால் பெண்களுக்கு என்ன செய்தி கொடுக்கப்படுகிறது?. பிரதமரே, உங்கள் சொல்லுக்கும், செயலுக்கும் உள்ள வித்தியாசத்தை ஒட்டுமொத்த இந்தியாவும் பார்க்கிறது.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்