பா.ஜனதா எம்.எல்.ஏ.வின் காரை மறித்து கொலை மிரட்டல் விடுத்த மர்மநபர்கள்

பெல்தங்கடியில் பா.ஜனதா எம்.எல்.ஏ.வின் காரை மறித்து கொலை மிரட்டல் விடுத்த மர்மநபர்கள் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Update: 2022-10-14 18:45 GMT

மங்களூரு;


தட்சிண கன்னடா மாவட்டம் பெல்தங்கடி தொகுதி பா.ஜனதா எம்.எல்.ஏ.வாக இருப்பவர் ஹரீஷ் பூஞ்சா. இவர் நேற்றுமுன்தினம் தனது நண்பர்களுடன் சோ்ந்து காரில் பெங்களூருவுக்கு சென்று விட்டு பெல்தங்கடி நோக்கி வந்துகொண்டிருந்தார். மேலும் எம்.எல்.ஏ. ஹரீசின் சொந்த கார் பின்னால் வந்து கொண்டிருந்தது.

அதனை அவரது டிரைவர் மட்டும் ஓட்டி வந்தார். படீல்-பரங்கிப்பேட்டை சாலையில் சென்றபோது வேறு ஒரு காரில் வந்த மர்மநபர்கள் சிலர், எம்.எல்.ஏ. ஹரீசின் காரை பின் தொடர்ந்து வந்துள்ளனர். இதைபாா்த்த கார் டிரைவர் உடனே முன்னால் நண்பர்கள் காரில் சென்ற எம்.எல்.ஏ.விக்கு தகவல் கொடுத்தார்.

இதையடுத்து அந்த மர்மநபர்கள் எம்.எல்.ஏ.வின் டிரைவர் சென்ற காரை வழிமறித்துள்ளனர். பின்னர் காரில் இருந்து ஆயுதங்களுடன் இறங்கிய மர்மநபர்கள் எம்.எல்.ஏ. காரை திறந்து டிரைவரிடம் ஆயுதங்களை காட்டி எம்.எல்.ஏ.வை கொலை செய்து விடுவதாக மிரட்டி உள்ளனர்.

பின்னர் அவர்கள் அங்கிருந்து தப்பி சென்றனர். இதுகுறித்து எம்.எல்.ஏ. ஹரீஷ் பூஞ்சாவின் கார் டிரைவர் நவீன், பண்ட்வால் போலீசில் புகார் அளித்தார். இந்த புகாரின் பேரில் ேபாலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி மர்மநபர்களை வலைவீசி தேடிவருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்