மைசூரு மாநில 2-வது சட்டசபை தேர்தல்

-ஒரு கண்ணோட்டம்

Update: 2023-03-30 21:13 GMT

kaமைசூரு மாநிலத்தின் முதல் சட்டசபை தேர்தலில் 80 தொகுதிகளில் இருந்து மொத்தம் 99 உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டனர். 2-வது சட்டசபைக்கான தேர்தல் கடந்த 1957-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 25-ந்தேதி நடந்தது. இந்த தேர்தலில் சட்டசபையில் உறுப்பினர்களின் எண்ணிக்கை 208 ஆக அதிகரிக்கப்பட்டது. அதாவது 179 ஒரு உறுப்பினர் தொகுதிகளும், 29 இரு உறுப்பினர் தொகுதிகளும் என சட்டசபை தொகுதிகள் வரையறுக்கப்பட்டன. இதில் ஒரு உறுப்பினர் தொகுதியில் 27 தொகுதிகள் ஆதிதிராவிடர் பிரிவினருக்கும், ஒரு தொகுதி பழங்குடியினர் பிரிவினருக்கும் ஒதுக்கீடு செய்யப்பட்டது.

இதற்கு காரணம், கடந்த 1956-ம் ஆண்டு

நவம்பர் 1-ந்தேதி மொழிவாரி மாநிலமாக பிரிக்கப்பட்ட பின்னர் மைசூரு மாநிலத்தின் எல்லை

விரிவடைந்தது தான்.

இந்த தேர்தலில் 179 ஒரு உறுப்பினர் தொகுதிகளில் மொத்தம் 73 லட்சத்து 1 ஆயிரத்து 80 வாக்காளர்களும், இரு உறுப்பினர் தொகுதிகளில் மொத்தம் 27 லட்சத்து 5 ஆயிரத்து 851 வாக்காளர்களும் இருந்தனர். மொத்தம் ஒரு கோடியே 6 ஆயிரத்து 931 வாக்காளர்கள் ஓட்டளிக்க தகுதியானவர்கள். இருப்பினும் ஓட்டளிக்க உரிமையானவர்கள் ஒரு கோடியே 25 லட்சத்து 15 ஆயிரத்து 312 பேர் இருந்தனர். அவர்கள் முறையான வாக்காளர் அடையாள அட்டை பெறவில்லை. சட்டசபை தேர்தலின் போது ஒரு உறுப்பினர் தொகுதியில் 39 லட்சத்து 59 ஆயிரத்து 518 பேரும், இரு உறுப்பினர் தொகுதியில் 24 லட்சத்து 60 ஆயிரத்து 641 பேரும் மட்டுமே வாக்களித்தனர். மொத்தம் 51.3 சதவீத ஓட்டுகளே பதிவாகி இருந்தது.

இதில் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி 207 இடங்களில் போட்டியிட்டு 150 இடங்களை பிடித்து மீண்டும் ஆட்சி அமைத்தது. 2-வது சட்டசபை தேர்தலில் பிரஜா சமூக நீதிக்கட்சி 79 இடங்களில் போட்டியிட்டு 18 இடங்களிலும், இந்திய கம்யூனிஸ்டு கட்சி 20 இடங்களில் போட்டியிட்டு ஒரு இடத்திலும், 6-ல் போட்டியிட்ட ஆதிதிராவிடர் கூட்டமைப்பு 2-லும், 2 இடங்களில் களமிறங்கிய இந்திய விவசாயிகள் மற்றும் தொழிலாளர் கட்சி 2-லும் வெற்றி வாகை சூடின. 208 இடங்களுக்கு மொத்தம் 251 சுயேச்சைகள் போட்டியிட்டனர். இதில் சுயேச்சைகள் 35 இடங்களை கைப்பற்றினர்.

இதைதொடர்ந்து 1957-ம் ஆண்டு ஜூன் 10-ந்தேதி தனிபெரும்பான்மை பெற்ற காங்கிரஸ் ஆட்சி அமைத்தது. எஸ்.நிஜலிங்கப்பாவே முதல்-மந்திரியாக நீடித்தார். 2-வது தடவையாக அவருக்கு காங்கிரஸ் கட்சி முதல்-மந்திரி பதவி கொடுத்து கவுரவப்படுத்தியது. இவர் 1958-ம் ஆண்டு மே 16-ந்தேதி வரை மட்டுமே முதல்-மந்திரி பதவி வகித்தார். அதன் பின்னர் பி.டி.ஜாட்டி முதல்-மந்திரியாக தேர்வு செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்