மைசூரு-சென்னைக்கு வாரத்தில் 3 நாட்கள் விமானம் சேவை

மைசூரு-சென்னைக்கு மேலும் ஒரு விமான சேவை தொடங்கப்பட்டுள்ளது.

Update: 2022-08-25 17:52 GMT

மைசூரு,

மைசூரு மண்டகள்ளியில் உள்நாட்டு விமான நிலையம் உள்ளது. இங்கு பெங்களூரு, சென்னை, மும்மை உள்ளிட்ட இடங்களுக்கு விமானங்கள் வந்து செல்கின்றன. அதன்படி மைசூருவில் இருந்து சென்னைக்கு வாரத்தில் 4 நாட்கள் இன்டிகோ விமானம் சேவை உள்ளது.

இதற்கிடையே பயணிகள் மைசூருவில் இருந்து சென்னைக்கு கூடுதல் விமானம் இயக்கும்படி கோரிக்கை வைத்தனர். இந்த கோரிக்கையை ஏற்று மைசூரு-சென்னைக்கு மேலும் ஒரு விமான சேவை தொடங்க முடிவு செய்யப்பட்டது.

வாரத்தில் 3 நாட்கள் அதாவது புதன், வெள்ளி, ஞாயிற்றுக்கிழமைகளில் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் விமானம் இயக்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி மைசூரு மண்டகள்ளி விமான நிலையத்தில் இருந்து சென்னைக்கு விமான சேவை தொடங்கப்பட்டது. இந்த விமான சேவையை மைசூரு மாவட்ட கலெக்டர் பகாதி கவுதம், விமான நிலைய அதிகாரிகள் மஞ்சள் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.

சென்னையில் இருந்து காலை 9.25 மணிக்கு புறப்பட்டு, 11 மணிக்கு மைசூரு விமானநிலையத்திற்கு வந்தடைகிறது. பின்னர் காலை 11.30 மணிக்கு மைசூருவில் இருந்து புறப்பட்டு சென்னைக்கு மதியம் 1 மணிக்கு சென்றடைவதாக விமான நிலைய அதிகாரி தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்