இஸ்லாமிய மதத்தினர் ஒருபோதும் பாஜகவுக்கு வாக்களிக்கமாட்டார்கள் - எம்.எல்.ஏ. சர்ச்சை பேச்சு
இஸ்லாமிய மதத்தினர் ஒருபோதும் பாஜகவுக்கு வாக்களிக்கமாட்டார்கள் என எம்.எல்.ஏ. தெரிவித்துள்ளார்.
லக்னோ,
உத்தரபிரதேச மாநிலம் சம்பால் தொகுதி சமாஜ்வாதி கட்சி எம்.எல்.ஏ. இக்பால் முகமது. இவர் இஸ்லாமிய மதத்தினர் ஒருபோதும் பாஜகவுக்கு வாக்களிக்கமாட்டார்கள் என கூறி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அவர் நேற்று கூறுகையில், உண்மையான இஸ்லாமிய மதத்தவர் ஒருபோதும் பாஜகவுக்கு வாக்களிக்கமாட்டார். ஏனென்றால், பாஜக மற்றும் ராஷ்டிரிய சுயம்சேவாக் சங்கம் (ஆர்எஸ்எஸ்) ஒருபோதும் இஸ்லாமிய மதத்தவராக இருக்க முடியாது. மகாத்மா காந்தியை கொன்ற கோட்சேவை வழிபடுபவர்களை இஸ்லாமிய மதத்தினர் ஒருபோதும் நம்பமாட்டார்கள்' என்றார்.
மேலும், இந்திய மஜ்லிக் இ இதிஹாத் உல் முஸ்லிமின் (எஐஎம்ஐஎம்) கட்சி தலைவர் அசாதுதீன் ஓவைசி பாஜகவின் 'பி டீம்' ஆக செயல்படுவதாகவும் எம்.எல்.ஏ. இக்பால் குற்றஞ்சாட்டினார்.
இஸ்லாமிய மதத்தினர் ஒருபோதும் பாஜகவுக்கு வாக்களிக்கமாட்டார்கள் என எம்.எல்.ஏ. பேசிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.