இந்தியாவில் தான் இஸ்லாமியர்கள் பாதுகாப்பாக உள்ளனர்: நிர்மலா சீதாராமன் பேச்சு

பாகிஸ்தானைவிட, இந்தியாவில் இஸ்லாமிய மக்கள் பாதுகாப்பாக உள்ளனர் என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

Update: 2023-04-11 09:05 GMT

புதுடெல்லி,

பாகிஸ்தானைவிட, இந்தியாவில் இஸ்லாமிய மக்கள் பாதுகாப்பாக உள்ளனர் என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

உலக வங்கி மற்றும் சர்வதேச நாணய நிதியம் உள்ளிட்டவற்றின் பல்வேறு கூட்டங்களில் பங்கேற்பதற்காக அமெரிக்கா சென்றுள்ள நிர்மலா சீதாராமன் அங்கு நிகழ்ச்சி ஒன்றில் பேசினார். அப்போது,

"இந்தியாவில் இஸ்லாமிய மக்கள் மிகவும் பாதுகாப்பாக உள்ளனர். பிரதமர் மோடியின் கீழான ஆட்சியில் அவர்களுக்கான கல்வி உள்ளிட்ட உரிமைகள் வெகுவாக வழங்கப்பட்டுள்ளன. நாடு விடுதலை அடைந்தது முதலே இந்தியாவில் இஸ்லாமியர் உள்ளிட்ட சிறுபான்மையினர் எண்ணிக்கை தொடர்ந்து ஏறுமுகமாகவே உள்ளது.

இஸ்லாமியர் தேசமாக அறிவித்துக்கொண்ட பாகிஸ்தானைவிட, இந்தியாவில் இஸ்லாமியர் பாதுகாப்பாக உள்ளனர். பாகிஸ்தானில் சிறுபான்மையினர் பெரும் இன்னல்களுக்கு ஆளாகி வருகின்றனர்" என்றார். 

Tags:    

மேலும் செய்திகள்