தொழிலாளி கத்தியால் குத்தி கொலை

அரிசிகெரே அருகே தொழிலாளியை கத்தியால் குத்தி கொலை செய்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2023-06-05 20:50 GMT

ஹாசன்:

அரிசிகெரே அருகே தொழிலாளியை கத்தியால் குத்தி கொலை செய்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

குடிபோதையில் தகராறு

ஹாசன் மாவட்டம் அரிசிகெரே தாலுகா தும்மேனஹள்ளி காலனியை சேர்ந்தவர் யதீஷ் (வயது 37). கூலி தொழிலாளி. அதே பகுதியை சேர்ந்தவர் அனுமந்தா. இவர் குடி பழக்கத்திற்கு அடிமையானவர் என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் அனுமந்தா தினமும் குடித்துவிட்டு வந்து, யதீஷிடம் தகராறு செய்து வந்தார். இதனால் இருவருக்கும் இடையே அடிக்கடி மோதல் ஏற்பட்டது.

அக்கம் பக்கத்தினர் தலையிட்டு 2 பேரையும் சமாதானம் செய்து வந்தனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலை யதீஷ் வீட்டின் அருகே செல்போனில் பேசி கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த அனுமந்தா குடிபோதையில் யதீஷிடம் தகராறில் ஈடுபட்டார்.

கத்தியால் குத்தி கொலை

இந்த மோதலின் போது, அனுமந்தா, தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து யதீஷை தாக்கினார். பலத்த காயமடைந்த யதீஷ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது குறித்து அரிசிகெரே புறநகர் போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

பின்னர் இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி அனுமந்தாவை கைது செய்தனர். அவர் மீது வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்