மும்பை பங்கு சந்தை: சென்செக்ஸ் குறியீடு 600 புள்ளிகள் உயர்வு
மும்பை பங்கு சந்தையில் சென்செக்ஸ் குறியீடு 600 புள்ளிகள் உயர்வடைந்து 59 ஆயிரம் புள்ளிகளாக உள்ளது.
மும்பை,
மும்பை பங்கு சந்தையில் இன்று காலை வர்த்தகம் தொடங்கியதும் சென்செக்ஸ் குறியீடு 600 புள்ளிகள் அல்லது 1 சதவீதம் என்ற அளவில் உயர்வடைந்து 59,320 புள்ளிகளாக உள்ளது.
இதில், ஐ.டி. மற்றும் வங்கி நிறுவன பங்குகள் லாபத்துடன் தொடங்கின. இதன்படி, டெக் மகிந்திரா நிறுவனம், இண்டஸ்இண்ட் வங்கி, ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி, எச்.சி.எல். டெக் மற்றும் டாடா கன்சல்டன்சி நிறுவனம் ஆகிய நிறுவன பங்குகள் லாபத்துடன் காணப்பட்டன.
இதேபோன்று, தேசிய பங்கு சந்தையில் நிப்டி குறியீடு 158.60 புள்ளிகள் அல்லது 1 சதவீதம் என்ற அளவில் உயர்ந்து 17,693.35 புள்ளிகளாக இருந்தது. தொடர்ந்து 170 புள்ளிகள் வரை உயர்ந்து, 17,720 புள்ளிகள் வரை உச்சமடைந்து உள்ளது.