மகனை கொன்று பெண் தற்கொலை

பெண் ஒருவர் மகனை கொன்றுவிட்டு தானும் தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2022-09-14 16:24 GMT

பெங்களூரு:


பெங்களூரு பேடராயனபுரா போலீஸ் எல்லைக்கு உட்பட்ட ஒசகுட்டதஹள்ளி பகுதியில் வசித்து வந்தவர் லட்சுமம்மா(வயது 45). இவரது மகன் மதன்(9). இந்த நிலையில் நேற்று மதனை தூக்கில் தொங்கவிட்டு கொலை செய்த லட்சுமம்மா தானும் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். அவர்கள் 2 பேரின் உடல்களையும் போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

விசாரணையில் லட்சுமம்மா சகோதரர் சித்தேகவுடாவுக்கும், ரஞ்சிதா என்ற பெண்ணுக்கும் திருமணம் நடந்தது. ஆனால் அவர்கள் 2 பேருக்கும் இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்தது. இதனால் ரஞ்சிதாவை, சித்தேகவுடா தாக்கியதாக தெரிகிறது. இதுகுறித்து ரஞ்சிதா போலீசில் புகார் அளித்து இருந்தார். இதனால் போலீசார் தன்னிடமும் விசாரணை நடத்துவார்கள் என்ற பயத்தில் மகனை கொன்று லட்சுமம்மா தற்கொலை செய்து கொண்டது தெரியவந்து உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்