மூடா அலுவலக ஊழியர் தூக்குப்போட்டு தற்கொலை

மங்களூருவில் மூடா அலுவலக ஊழியர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2023-06-03 18:45 GMT

மங்களூரு:-

தட்சிண கன்னடா மாவட்டம் மங்களூருவை அடுத்த படில் பகுதியை சேர்ந்தவர் கீர்த்தன் அலபே(வயது 36). இவர் மங்களூரு நகர வளர்ச்சி ஆணைய (மூடா) அலுவலகத்தில் ஊழியராக பணியாற்றி வந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் அவர் அலுவலகத்தில் உள்ள அறையில் தூக்கில் பிணமாக தொங்கினார். இதைப்பார்த்த சக ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் அவர்கள் இதுகுறித்து உருவா போலீசாருக்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் கீர்த்தனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். முதற்கட்ட விசாரணையில் அவர் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. ஆனால் அவர் எதற்காக தற்கொலை செய்து கொண்டார் என்பது தெரியவில்லை. இதுகுறித்து உருவா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்