மூன்று குழந்தைகள் பெற்ற எம்.பிக்களை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் - பரபரப்பை கிளப்பிய அஜித் பவார்
மூன்று அல்லது அதற்கு மேற்பட்ட குழந்தைகளை பெற்றுக்கொள்ளும் எம்.பிக்களை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்று அஜித் பவார் வலியுறுத்தியுள்ளார்.
பாராமதி,
மூன்று அல்லது அதற்கு மேற்பட்ட குழந்தைகளை பெற்றுக்கொள்ளும் எம்.பிக்களை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்று அஜித் பவார் வலியுறுத்தியுள்ளார்.
மராட்டிய மாநிலம், பாராமதியில் நடைபெற்ற நிகழ்ச்சிகளில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் துணை முதல்-மந்திரியுமான அஜித் பவார் கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், இந்தியாவில் மக்கள் தொகை 142 கோடியாக அதிகரித்துள்ளது கவலை அளிப்பதாகவும், இதற்கு நாமே பொறுப்பு எனவும் அவர் குறிப்பிட்டார்.
மேலும் பேசிய அவர், மூன்று அல்லது அதற்கு மேற்பட்ட குழந்தைகளை கொண்டிருக்கும் எம்.பி., எம்.எல்.ஏக்களை மத்திய அரசு தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினார். எனினும், தம்பதிகளுக்கு முதலில் ஒரு குழந்தை பிறந்து, இரண்டாவது இரட்டைக் குழந்தைகள் பிறந்தாலோ அல்லது ஒரே முறையில் மூன்று குழந்தைகள் பிறந்தாலோ, அது அவர்களின் தவறாக கருதக் கூடாது என்றும் கூறினார்.