மோட்டார் சைக்கிள்-லாாி மோதல்; 2 பேர் பலி
சிக்கமகளூருவில் மோட்டார் சைக்கிள் மீது லாாி மோதிய விபத்தில் 2 பேர் பலியானார்கள்.
சிக்கமகளூரு;
சிக்கமகளூரு தாலுகா பசவனக்கொடி கிராமத்தை சேர்ந்தவர் ராமசாமி(வயது 32). இதே போல் அதேப்பகுதியை சேர்ந்தவர் சுரேஷ்(30). இவர்கள் 2 பேரும் மோட்டார் சைக்கிளில் வேலை விஷயமாக வெளியே சென்றனர். மோட்டார் சைக்கிளை, சுரேஷ் ஓட்டியதாக தெரிகிறது.
பக்தரஹள்ளி பகுதி அருகே சென்று கொண்டிருந்தபோது, அதே சாலையில் எதிரே வந்த டிப்பர் லாரி திடீரென அவர்கள் 2 பேர் சென்ற மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
இதில் மோட்டார் சைக்கிளில் இருந்து 2 பேரும் தூக்கி வீசப்பட்டனர். இதில் ராமசாமி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். படுகாயமடைந்த சுரேசை, அருகில் இருந்தவர்கள் மீட்டு சிக்கமகளூரு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அங்கு அவர் சிகிச்சை பலனின்றி இறந்துவிட்டார்.
இதற்கிடையே டிப்பர் லாரியை ஓட்டி வந்த டிரைவர் தப்பியோடிவிட்டார். விபத்து பற்றி தகவல் அறிந்து சிக்கமகளூரு புறநகர் போலீசார் விரைந்து சென்று பார்வையிட்டனர். இந்த விபத்து குறித்து சிக்கமகளூரு புறநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.