மோட்டார் சைக்கிள் - ஜீப் மோதல்; ஆந்திராவை சேர்ந்தவர் பலி

இரியூர் அருகே மோட்டார் சைக்கிள் - ஜீப் மோதிய விபத்தில் ஆந்திராவை சேர்ந்தவர் பலியானார்.

Update: 2022-09-26 18:45 GMT

சிக்கமகளூரு;

சித்ரதுா்கா மாவட்டம் இரியூர் தாலுகாவில் உள்ள வாணிவிலாஸ்பூர் சாலையில் மோட்டார் சைக்கிளில் தொழிலாளிகள் 2 பேர் வந்து கொண்டிருந்தனர். அப்போது அதே சாலையில் எதிரே வாணிவிலாஸ்பூரில் இருந்து ஜீப் ஒன்று வந்துள்ளது. இந்த நிலையில் மோட்டார் சைக்கிள் மீது எதிரே வந்த ஜீப் திடீரென மோதியது.

இதில் மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேரும் தூக்கி வீசப்பட்டனர். இதில் மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்தவர் தலையில் படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். பின்புறம் அமா்ந்திருந்தவர் படுகாயம் அடைந்து உயிருக்கு போராடினர்.

அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக இரியூர் ஆஸ்பத்திரியில் சோ்த்தனர். இதுகுறித்து தகவல் அறிந்து வந்த இரியூர் போலீசார் உடலை கைப்பற்றி விசாரித்தனர். விசாரணையில் அவர் ஆந்திர மாநிலத்தை சேர்ந்த விநாயக் நாயுடு(வயது 30) என்பதும், படுகாயம் அடைந்து சிகிச்சை பெற்று வருபவர் அப்பையா நாயுடு என்பதும் தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்