உறங்கிய போது அழுததால் ஆத்திரம்: சிறுவனை கொடூரமாக தாக்கிய தாயின் கள்ளக்காதலன் கைது

திருச்சூர் அருகே கணவரை பிரிந்த இளம்பெண் தன் கள்ளக்காதலன் உடன் வசித்து வருகிறார்.

Update: 2022-08-10 21:59 GMT

பாலக்காடு:

திருச்சூர் மாவட்டம் திரைபிரையார பகுதியை சேர்ந்தவர் பிரசாந்த் (வயது 29). அப்பகுதியில் கணவரை பிரிந்த இளம்பெண்ணுக்கு 4 வயதில் மகன் உள்ளான். இதற்கிடையே பிரசாந்துக்கும், இளம்பெண்ணுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது.

இந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. தொடர்ந்து இளம்பெண் தனது மகனுடன் பிரசாந்த் வீட்டில் வசித்து வருகிறார். சம்பவத்தன்று பிரசாந்த் உறங்கி கொண்டிருந்த போது, சிறுவன் அழுதுகொண்டே இருந்து உள்ளான்.

இதனால் கோபம் அடைந்த பிரசாந்த், சிறுவனை அடித்து தாக்கி உள்ளார். மேலும் சிறுவனின் மர்ம உறுப்பை தாக்கியதாக கூறப்படுகிறது. இதனால் சிறுவன் வலியால் துடித்தான்.

இதுகுறித்த புகாரின் பேரில் குன்னங்குளம் போலீசார் பிரசாந்தை கைது செய்தனர். மேலும் சிறுவன் திருச்சூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறான்.

Tags:    

மேலும் செய்திகள்