ஜூன் 26-ந்தேதி வரை ஒரு கோடிக்கும் அதிகமானோர் வருமான வரி தாக்கல் - வருமான வரித்துறை தகவல்
ஒரு கோடி வருமான வரி கணக்கு தாக்கல் மைல் கல்லை 12 நாட்களுக்கு முன்னதாகவே எட்டியுள்ளதாக வருமான வரித்துறை தெரிவித்துள்ளது.
புதுடெல்லி,
2022-23 நிதியாண்டிற்கான வருமான வரிக்கணக்கை தாக்கல் செய்வதற்கான கடைசி தேதி ஜூலை 31 ஆகும். இந்நிலையில் வருமான வரித்துறையின் டுவிட்டர் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ள பதிவில், ஜூன் 26-ந்தேதி வரையிலான காலத்தில் ஒரு கோடிக்கும் அதிகமானோர் வருமான வரி கணக்கை தாக்கல் செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் முந்தையை ஆண்டை ஒப்பிடுகையில் ஒரு கோடி வருமான வரி கணக்கு தாக்கல் மைல் கல்லை 12 நாட்களுக்கு முன்னதாகவே தற்போது எட்டியுள்ளதாக வருமான வரித்துறை தகவல் தெரிவித்துள்ளது. வரி செலுத்துவோர் கடைசி நேர அவசரத்தை தவிர்க்க முன்கூட்டியே வருமான வரி கணக்கை தாக்கல் செய்யுமாறு வருமான வரித்துறை அறிவுறுத்தியுள்ளது.