பெண்கள் பாதுகாப்பு: டெல்லியில் இருள் சூழ்ந்த 1,000 இடங்களில் விளக்குகள் அமைக்க மத்திய அரசு திட்டம்

டெல்லியில் இருள் சூழ்ந்த பகுதிகளாக கண்டறியப்பட்டுள்ள 1,000 இடங்களில் விளக்குகள் அமைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

Update: 2022-07-15 22:58 GMT

டெல்லி,

நாட்டில் பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுக்க மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன.

இந்நிலையில், தலைநகர் டெல்லியில் இருள் சூழ்ந்த 1,000 இடங்களில் விளக்குகள் அமைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

டெல்லியின் தெற்கு, மேற்கு, வடக்கு பகுதிகளில் உள்ள சாலைகள், மேம்பாலங்களில் 1,000 இடங்களில் இரவு வெளிச்சம், விளக்குகள் இன்றி இருள் சூழ்ந்த நிலையில் உள்ளதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. குறிப்பாக, வடக்கு, தெற்கு டெல்லி மாநகராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் அதிக இடங்களில் விளக்குகள் இன்றி இரவில் இருள் சூழ்ந்த உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவ்வாறு இருள் சூழ்ந்த பகுதிகளாக கண்டறியப்பட்டுள்ள 1,000 இடங்களுக்கு 11 கோடி ரூபாய் செலவில் எல்.இ.டி. விளக்குகள் அமைக்கும் பணியை மேற்கொள்ள மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சகம் திட்டமிட்டுள்ளது. இந்த திட்டம் இன்னும் 6 மாதங்களில் நிறைவேற்றப்படும் என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்