பிரதமர் மோடி வாகனத்தின் மீது செல்போன் வீச்சு - புதிய தகவல்கள்

மோடி வாகனத்தின் மீது செல்போன் வீசிய நபரை போலீசார் வலைவீசி தேடிவருகிறார்கள்.

Update: 2023-05-01 03:18 GMT

பெங்களூரு,

பிரதமர் மோடி நேற்று கர்நாடக மாநிலம் மைசூருவில் ஜம்பு சவாரி ஊர்வல பாதையில் திறந்த வாகனத்தில் ஊர்வலமாக சென்று தேர்தல் பிரசாரம் செய்தார். ஊர்வலத்தின்போது பொதுமக்களும், பா.ஜனதா தொண்டர்களும் மோடியின் வாகனத்தின் மீது பூக்களை தூவினர். மோடியின் வாகனம் மைசூரு டவுன் சிக்ககடியாலா பகுதியில் சென்றபோது அவரது வாகனத்தின் இடது பக்கத்தில் இருந்து ஒருவர் திடீரென செல்போனை வீசினார்.

அந்த செல்போன் மோடியின் வாகனத்தின் மேல் விழுந்து வாகன கேபின் மீது விழுந்தது. அதையடுத்து அந்த செல்போன் சாலையில் விழுந்தது. பிரதமர் மோடி மீது செல்போன் படவில்லை. இதற்கிடையே மைசூரு முழுவதும் போலீசார் உஷார்படுத்தப்பட்டனர். இருப்பினும் மோடியின் ஊர்வலம் முழுமையாக நடந்தது. மோடி தனது ஊர்வலத்தை நிறுத்தாமல் தொடர்ந்து நடத்தினார். மோடி வாகனத்தின் மீது செல்போன் வீசிய நபரை போலீசார் வலைவீசி தேடிவருகிறார்கள்.

இந்த நிலையில், பிரதமர் மோடி வாகனத்தின் மீது செல்போன் வீச்சு பற்றி புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன. வீசப்பட்ட செல்போன் பாஜக தொண்டருடையது எனவும், பிரதமரை பார்த்த மகிழ்ச்சியில் பூக்களை தூவி, கைகளை வேகமாக அசைத்தபோது செல்போன் தவறுதலாக வீசப்பட்டதாகவும் முதற்கட்ட விசாரணையின் தெரியவந்துள்ளது. செல்போனை கைப்பற்றி உளவுத்துறை மற்றும் காவல்துறையினர் தீவிர விசாராணை நடத்தி வருகின்றனர்.

பிரதமர் பயணம் செய்த வாகனத்தின் மீது செல்போன் வீசப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து பாதுகாப்பை மேலும் வலுப்படுத்த ஆலோசனை நடத்தப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. மேலும் பாதுகாப்பு குறைபாடுகளை களைய விரைவில் ஆலோசனை நடைபெறும் என பாதுக்காப்புத்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவத்தால் பாதுகாப்பு அச்சுறுத்தல் இல்லை என உளவுத்துறை தெரிவித்துள்ளதாக காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்